அது என்ன மந்திரமோ மாயமோ தெரியல எவன பாத்தாலும் positive thinking பத்தி கிளாஸ் எடுக்குறான். காலேஜ் ல ஆனா ஊனா personality development ன்னு சொல்லிக்கிட்டு Positive திங்கிங் என்ற வார்த்தைய வச்சி உயிர் எடுத்தானுங்க ( கூடவே பணத்தையும் ).
சும்மா எதாச்சும் இப்படி ஆகிட போகுதுன்னு எதிர்மறையா சொன்னா கூட நண்பர்கள் , "அபசகுனமா பேசாத," Positive வா யோசி மச்சி ன்னு சொல்றாங்க ..
ஆனா பாருங்க எனக்கு என்னவோ நெகடிவ் திங்கிங் என்ற விஷயம் சில சமயத்துல ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணுது.
நெகடிவ் எப்போவுமே நெகடிவ் இல்ல...... நெகடிவ் விஷயத்துல கூட பாசிடிவ் தேடி எடுக்கிறது தான் ரியல் positive thinking.
நல்லதே நடக்கும் ன்னு நினைக்கிறது Positive திங்கிங் இல்ல... கெட்டது நடந்தாலும் அதுல கூட நல்லவிஷயம் தேடுறது தான் Positive திங்கிங்
ஒரு சின்ன உதாரணம் :
என்னவோ பண்ணி நம்ம ஆளுங்க ஏரோப்ளேன் கண்டு பிடிச்சிட்டாங்க.. விபத்து நடக்காது நடக்காது ன்னு எல்லர போல Positive திங்கிங் ல இருந்திருந்தா அவ்ளோதான்.
ஆனா எப்படியும் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கு ன்னு நெனச்ச ஒரு "நெகடிவ் திங்கிங் "புண்ணிவான் பண்ண யோசனை தான் ஏரோப்ளேன் ல parachute எடுத்துகிட்டு போக தூண்டி , இன்னைக்கு பல உயிரை காப்பாத்துது..
நெகடிவ் நல்லது
இந்த மாதிரி சிந்தனைகளுக்காக தான் எனக்கு உன்னை அவ்ளோ புடிச்சிருக்கு . லவ் you உமா !
ReplyDelete