Tuesday, September 24, 2013

முத்தம்

முத்தம் இருதையபூர்வமானது ..

அடக்கி , அமுக்கி புதைத்துவைக்கப்பட்ட காமத்திற்கு வேண்டுமானால் முத்தம் ஒரு வடிகாலாய் இருக்கலாம்....

ஈடுபாட்டுடன், காதலுடன் செய்யயும் காமம் கூட முத்தம் போல் இருதையப்பூர்வமான செயலாக இருக்கும் ... 

முத்தம் என்றாலே ஆண் பெண்ணுக்கோ , அல்லது பெண் ஆணுக்கோ கொடுக்கும் ஒரு நிகழ்வாய் ஆக்கிவிட்டதில் சினிமாவின் பங்கு மொக்கையான ஒன்று.... ஒரே பாலினர் பரிமாறிக்கொள்ளும் முத்தம் ஒரு பகடி நிகழ்வாக சில சினிமாக்கள் மாற்றிவிட்டன என்றால் அது மிகையில்லை.

முத்தம் குடுக்கையில் கிளு கிளு என்று பூங்கொத்தை ஆட்டுவது....வயலின் அல்லது குருவிகளின் ரீங்கார இசை Background டில் ஓடவிடுவது என்று முத்தத்தை ஒரு Big Bang theory போல் காட்டுவதில் சினிமா பெரும்பங்கு வகிக்கிறது .

ஒரு பர்சனல் அனுபவம் :

UK வில் இருந்த சமயத்தில் சில Hookers (பாலியல் தொழிலாளிகள் ) சிலர் எனக்கு நண்பர்களாய் இருந்திருக்கின்றனர்.அவர்களில் ஒருவருடனான உரையாடலின் போது ஒன்று கேட்டேன் .

"எல்லாவற்றையும் மற்ற ஆடவர்களுடன் பகிர்ந்துகொண்டப்பின் உங்கள் கணவர்களுக்கு குடுக்க என்ன இருக்கிறது ? " என்று.. (என்ன ஒரு ஆணாதிக்கம் எனக்கு அப்போது ?? )

அதற்க்கு அவர் சொன்ன பதில் " முத்தம் ..." "முத்தம் ஆத்மார்த்தமானது.."
அவரைவிட வேறு யாரு முத்தம் குறித்து கூறினாலும் சீரியசாய் எடுத்திருக்கவே மாட்டேன். காமத்தை கூட ஆத்மார்த்தமாய் பார்க்க கற்றுக்கொண்ட தருணம் அந்த சந்திப்பு.

Lip Kiss ஐ ,Mouth Kiss என்றே விளிக்கும் நம் ஆட்களிடம் எப்படி சொல்வது ??
மகள்களை பெற்ற அப்பாக்களின் முத்தம் மட்டுமல்ல, எந்த முத்தமும் காமத்தில் சேரவே சேராது என்பதை ....

1 comment:

  1. Lip Kiss ஐ ,Mouth Kiss என்றே விளிக்கும் நம் ஆட்களிடம் எப்படி சொல்வது ??
    மகள்களை பெற்ற அப்பாக்களின் முத்தம் மட்டுமல்ல, எந்த முத்தமும் காமத்தில் சேரவே சேராது என்பதை ....// fact

    ReplyDelete