Tuesday, September 24, 2013

போலி தமிழ்தேசியவாதிகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் ?



தமிழில் இருந்து தான் தங்கள் மொழிகள் திரிந்து வந்தன என்ற உண்மை நம்மைவிட மற்ற திராவிட மொழிக்காரர்களுக்கு நன்றாக தெரியும்...அதனால் தான் அவர்கள் தமிழை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மொழியை ஒரு ஆயுதமாய் வைத்து மக்களை வசப்படுத்தும் வேலையை செவ்வனே அந்த மாநிலங்களின் அரசியல் கட்சிகள் செய்துவருகின்றன.. இங்கே தமிழ்தேசியம் என்று பேசிப்பேசி பிற மாநில மக்களை வெறுக்க வைக்கும் சில கட்சிகளைப்போல் என்றோ பல கட்சிகள் அண்டை மாநிலங்களில் வந்துவிட்டன.

திராவிட சிந்தனைகளுக்கு பிற திராவிடமொழிகளின்மேல் அந்த tolerence level அதிகம். ஒரு தெலுங்கரை, கன்னடரை நாம் மொழி பாகுபாடு இன்றி நடிகராகவோ, அரசியல் தலைவராகவோ ஏற்றுக்கொள்ள திராவிட சிந்தனைகள் தந்த பக்குவம் தான் காரணம்.

இப்போது உள்ளது போல் தமிழ் தேசியம் எல்லாம் பேசி திரிந்தால் ஒரு கன்னட வெறியரை, தெலுகு வெறியரை நினைக்கையில் என்ன உணர்வு நமக்கு வருகிறதோ அதே ஒரு உணர்வு தான் தமிழனை பார்த்து மற்ற மொழிக்காரர்களுக்கும் வரும்.

துரதிஷ்டவசமாக இங்கே தமிழ் தேசியம் பேசும் கட்சிகாரர்கள் ஈழ ஆதரவாளர்களாக இருக்கின்றனர். மற்ற மொழிக்காரர்களை ஏற்க் மாட்டோம் என்று கூறும் அதே கட்சிகள் தமிழருக்கு அரசியல் அதிகாரம் சரிவர வழங்காத இலங்கை அரசை கண்டிப்பது பெயர் தான் நகைமுரண் .

தமிழின் திரிபு மொழிகள் தான் ஏனைய திராவிட மொழிகள் என்பதில் ஐயமே இல்லை எனினும் அண்ணன் அசோக் கூறியது போல் அதை ஒத்துக்கொள்ள அவர்கள் மனம் இடம் குடுக்காது...

மொழியை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி இன்றைய போலி தமிழ்தேசியவாதிகள் செய்யும் சுயநல அரசியல் களைவது என்பது மிக அவசியம்.

நம்மிலிருந்து பிரிந்தவர்கள் என்ற எண்ணம் நம்மோடு இருப்பதால் தான் வட நாட்டுகாரர்களிடம் வராத ஒரு அன்னியோன்யம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை பார்த்தால் நமக்கு வருகிறது. திராவிடம் என்ற சமத்துவத்தை போலிகள் மறுதலிக்க இதுவே காரணம். எதையாவது செய்து புரட்சி என்ற பெயரில் ஒரு பதற்ற நிலவரம் வேண்டும் அவர்களுக்கு. ஓட்டரசியலின் கேவலமான முகம் இது தான்.

மொழியை வைத்து பாகுபாடு காட்டிப்பிரிந்த இன்னொரு பிரதேசம் பாஸ்க் பிரதேசம் .(Basque country ) ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாய் இருந்தாலும் அவர்களுடன் ஒத்துப்போகாத ஒரு மனோபாவம் அவர்களுக்கு இருப்பதால் பாஸ்க் பிரதேசம் என்றாலே ஒரு தீவிரவாதிகள் நிறைந்த பிரதேசம் என்ற பிம்பம் ஐரோப்பிய மக்களுக்கு பெரிதும் உண்டு. ஒரு ஸ்பானிஷ் மனிதனுக்கு கிடைக்கும் மரியாதை பாஸ்க் பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவனுக்கு கிடைக்கவே கிடைக்காது எளிதில்.

இத்தகைய மொழி ரீதியிலான ஆயுதத்தை இந்த போலி தமிழ்தேசியவாதிகள் எடுத்து செயல்படுவது தமிழ் சூழலுக்கு மிக ஆபத்தானது. ( போன வருடம் தமிழ்நாட்டுக்கு வந்த புத்த பிட்சுக்களை தாக்கி தங்களுடைய தமிழ்பற்றை அந்த போலி தமிழ் தேசியவாதிகள் நிலைநாட்டினர் என்பது நினைவில் கொள்ளலாம் ).

இந்த "வந்தேறிகள் " என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு பிரிவரசியல் நிகழ்த்தும் மாய பிம்பம் தான் இந்த தனித்தமிழ் தேசியம் எல்லாம். எதிர்க்க எதுவுமே இல்லாத காரணத்தால் தான் உருப்படியான ஒன்றாக இருக்கும் திராவிட சிந்தனைகளை எல்லாம் எதிர்க்க துணிகிறது இந்த போலி தமிழ் தேசியம் .எதுவுமே இல்லாத காலத்தில் பெரிய ஆளாய் உருவெடுக்க ஹிட்லர் aryan superiority கொள்கையை கையிலெடுத்ததைபோல் தான் இந்த தமிழ் தேசியவாதிகளும் இறங்கியுள்ளார்கள்.

ஆரியத்தை , சாதியத்தை எதிர்ப்பதைவிட இத்தகைய போலி தமிழ் தேசியவாதிகள் நிகழ்த்தும் இந்த நூதன தீவிரவாதத்தை எதிர்ப்பது தமிழர் என்ற முறையில் மிக அவசியமாகிறது .

No comments:

Post a Comment