Gravity ..( என்னை "ஈர்த்த" சினிமா )
ஒருவழியாக Gravity பார்த்துவிட்டேன் .
90 நிமிடம். தட தட என எந்த தொய்வும் இல்லாமல் கதை நகர்ந்தது.
இரு பிரதான கதாபாத்திரங்கள் . ரயன் ஸ்டோன் ,மாத்தியு கௌலாஸ்க்கி ஆகிய லீட் ரோலில் Sandra Bullock, (ஸ்பீட் படத்துல ஸ்பீடா பஸ்சு ஓட்டுன அதே புள்ள..) George Clooney ( அந்த ஊரு சால்ட் அண்ட் பெப்பர் அஜித் ) ஆகியோர் கனகச்சிதமாக பொருந்தி நடித்துள்ளனர்.
அமெரிக்காவின் Hubble's Telescope பில் ஏற்ப்பட்ட ஒரு பழுதை சரி செய்ய இருவரும் விண்வெளி பயணம் செய்கின்றனர். ரயனுக்கு இது முதல் பயணம். ரிட்டையர்ட் ஆகும் முன் மேட் க்கு இது கடைசி பயணம் .
ரஷ்யர்கள் தங்கள் பழுதடைந்த ஒரு செயற்க்கைகோளை உடைக்க ஏவும் ஒரு ஏவுகணை அதை வெடித்துச்சிதற செய்கிறது. அதிலிருந்து உடைந்து சிதறும் துகள்கள் இவர்களது ஸ்பேஸ் கேப்சூலையும் தாக்குகிறது. கண்ட்ரோல் ரூமில் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டு , இவ்விருவரை தவிர அனைவரும் இறக்கின்றனர்.
எதிர்பாராத ஒரு சந்தர்பத்தில் மேட் உயிர் தியாகம் செய்கிறார். அந்த புள்ளியில் இருந்து ஒரு One Woman Journey towards earth.
முழுக்கதையையும் சீன் பை சீன் சொன்னால் சுவாரசியம் போய்விடும் ( முழு கதையையும் டைப் அடிச்சி டிஸ்கஸ் பண்ணுறதுக்கு நாங்க சோம்பேறிங்க என்ற குறியீடு இது ).
முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன். நான் குறியீடுகளின் காதலன். டைரக்டருக்கே தெரியாத குறியீடுகளை தேடித்தேடி சினிமாவில் பார்ப்பவன்.
( டிஸ்கி(Disc ) யை முதலிலே சொல்லிவிடுவது நல்லது )
அவ்வகையில் Gravity என்னை கவர்ந்தது.
சில அழகியல்கள் :
Cast Away, Apollo 13 இரண்டையும் சேர்த்து கிண்டியது போல் இருந்தாலும் சில நல்ல டைரக்டோரியல் டச் இந்த படத்தில் இருக்கிறது .
விண்வெளி :
"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது.
பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது "
என்று நம்ம சித்தர்கள் பாடல் எல்லாம் எழுதி விளையாடி இருக்கின்றனர். ஆனால் மேலை நாடுகளில் அவ்வாறு இல்லை. விண்வெளி குறித்து பேசுவது, தகவல்கள் பரப்புவது என்பது ஒரு காலத்தில் கொடுங்குற்றம். பூமியை சுற்றிதான் சூரியன் சுற்றுகிறது என்று நம்பிய காலம் முதல் , இன்று Eric Von Daniken னின் Ancient Aliens thoery ( நாம் வணங்கும் கடவுள்கள் யாவரும் வேற்றுகிரகத்தில் இருந்து நம் கிரகம் வந்த விண்வெளி வீரர்கள் ), டார்வினிசதிர்க்கு சவால் விடும் Cosmozoic Theory ( பூமியின் உயிர்கள் அனைத்தும் வேறு கிரகத்தில் தோன்றியவை ) வரை அறிவியலுக்கும் , இறை நம்பிக்கைக்கும் ஒரு போட்டா போட்டி நடந்துகொண்டே இருக்கிறது. இந்த படத்தில் ஆனால் கிறிஸ்துவத்துக்கு சாவால் விடும் ஆனால் இறைநம்பிக்கையை அழுத்தமாக பதிவு செய்யும் நுண்ணரசியல் அழகாய் இருக்கிறது.
அவ்வகையில் அவர்களுக்கு விண்வெளி என்பது ஒரு ஆர்வத்தைதூண்டும் கதைக்களம். விண்வெளி குறித்து எந்த படம் எடுத்தாலும் அதில் கிறிஸ்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒரு கூட்டம் கிளம்பும். இறை நம்பிக்கைகள், மத கோட்பாடுகள் பொதிந்த படங்கள் வந்துகொண்டு இருந்த வேளையில் 2001 : A Space Odyssey ( நம்ம தலைவர் கூப்ரிக் கின் படம் ) படம் எடுத்தே ஒரு புரட்சி தான். அந்த படம் வந்த அடுத்த வருடம் தான் நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்த அந்த யுக முக்கிய நிகழ்வு நடந்தேறியது . அந்த படம் வெளிவந்த போது அது உருவாக்கிய அதிர்வு அப்போது எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அந்தப் படம் விண்வெளி குறித்த படங்களுக்கு ஒரு Benchmark என்றால் அது மிகையில்லை.
இந்த படம் அந்த அளவுக்கு இம்பாக்ட் தருகிறதா என்றால் அது சரியான கேள்வி அல்ல. காரணம் நமக்கு விண்வெளி குறித்து எக்கச்சக்க தகவல்கள் இப்போது தெரியும். Escape Velocity குறித்து கேட்டால் ஒரு 11 th std மாணவன் கூட விளக்கம் தருவான்.
ஆனால் தனியே விண்வெளியில் அகப்பட்டுக்கொண்டால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை இந்த படம் முகத்தில் அறைவது போல் கூறுகிறது. ரெண்டே ரெண்டு Protagonist. அதனால் நமது கவனம் சிதறாமல், குழப்பாமல் விண்வெளியில் தனியே மாட்டிக்கொண்ட வாதையை சிறப்பாக கூறுவதில் இந்த படம் தனித்து நிற்கிறது .
படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க ஒரு Spiritual touch கொடுத்திருக்கிறார் இயக்குனர் .
படம் முழுக்க மறுபிறப்பு தத்துவங்கள் விரவி கிடக்கின்றன .
சாண்ட்ரா விண்கலத்தின் உள்ளே மறுபடியும் பிரவேசிக்கும் சீனில் கருவில் இருக்கும் குழந்தை போல் இருக்கிறார் என்று இயக்குனரே கூறினார் ஒரு பேட்டியில் . (இப்போ எல்லாம் இயக்குனர்களே குறியீடு எது என்று சொல்லிவிடும் காலம் போல ).
அதற்கு முன் கொஞ்சம் கவனியுங்கள் . அந்த space Capsule என்பது ஒரு சினை முட்டையை போல் இருக்கும். அதில் உள்ளே வரும் ரயன் baby with Umblical Cord போன்று இயக்குனர் காட்டியது ஓகே தான். ஆனால் பாருங்கள் சாண்ட்ரா மட்டும் தான் உள்ளே வருவார். அதுவும் அந்த கேப்சூளின் கதவை திறக்க கஷ்டப்பட்டு உள்ளே வருவார். மேட் கெளலாஸ்க்கி உள்ளே வராமல் உயிர் தியாகம் செய்வார். ஏனைய அனைவரும் அங்கே நடந்த வெடிப்பு காரணமாக இறப்பார்கள்.
capsule தேடி அங்கும் இங்கும் அலைவார்கள் அவ்விருவரும் .
அங்கே அனைவரையும் Sperms ஆக உருவகம் செய்து , ஒரே ஒரு sperm மட்டும் கருத்தரிக்கும் (ரயான் மட்டும் உள்ளே வருவது ), மற்ற அனைத்து Sperm களும் (மற்ற விண்வெளி வீர்கள் ) இறப்பது என்று ஒரு Fertilization Process சை அழகாக உருவகித்து இருக்கிறார் இயக்குனர்.
ஒரு Molecular Biologist ஆக பார்த்தபோது என்னை மிகவும் ரசிக்க செய்தது.
படத்தில் ரயானுக்கு வேற்றுகிரக வாசி குறித்து பயம், சந்தேகம் வரவைக்கும் ஒரு குட்டி இடம் இருக்கிறது. ஒரு சீனில் crew member ஒருவரின் பொம்மை பறந்து வரும் அவரிடம். அது என்ன பொம்மை என்றால் "Marvin, The Martian " என்ற Looney Tunes கதாபாத்திரம். செவ்வாய்கிரகவாசி பொம்மை அவரை முறைத்து பார்த்துக்கொண்டே மிதந்து போகும் சீன் .கிளாசிக் !!
மற்றுமொரு சீனில் விண்வெளி வீரர்களுக்கும் அவர்களுக்கு கட்டளை வழங்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் இடையே இருக்கும் தொடர்பு விட்டுப்போகிறது ( எவனோ இன்கமிங் ஆம் !!).
நாம் பேசுவது அவர்களுக்கு கேட்காது என்று ரயான் கூறும் நேரத்தில் , மேட் சொல்வார் " அவர்கள் பேசுவது நமக்கு கேட்காவிடினும் , நாம் பேசுவது அவர்களுக்கு கேட்கும் " என்று கூறுவார் .
பதிலே சொல்லாத கடவுளுக்கு நாம் செய்யும் பிராத்தனை எந்த நம்பிக்கையில் என்பதை அழகாக கூறியிருப்பார் இயக்குனர் .
தன மகள் கீழே விழுந்து ஒரு விபத்தில் இறந்ததால் , மனதளவில் பிணமாய் வாழும் ரயான் அமைதியை விரும்பி விண்வெளி வருகிறார் . ஆனால் அதே அமைதி , ஆள் அரவமற்ற ஒரு நிசப்தம் அவரை அங்கே கொல்கிறது . விரும்பிய ஒரு விஷயமே அவருக்கு பிடிக்காமல் போகிறது.
தன மகள் கீழே விழுந்து இறக்க காரணமாய் இருந்த புவியீர்ப்பு விசை அவருக்கு வெறுப்பு தருகிறது. ஆனால் பின்னர் அந்த விசை தேடி அவரே அலைவது ஒரு அழகிய முரண்.
ஒரு இக்கட்டான தருணத்தில் , மேட் உயிர் தியாகம் செய்கிறார். தன்னையும் ரயானையும் இணைக்கும் கயிரை வெட்டிவிட்டு அவர் ரயானை காப்பாற்றுகிறார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை " You have learn to let go. " நக்கல் நையாண்டியாய் திரியும் அந்த கதா பாத்திரம் அழகாக " ப்ரீயா வுடு மாமே " என்ற ஜென் தத்துவத்தை அங்கே கூறுவது நல்ல காட்சி .
தானைத்தலைவன் Christopher Nolan னின் படைப்பான The Dark Knight Rises படத்தில் ஒரு Prison escape சீன் .
I m nto gonna Die here என்று ஹீரோ கூறுவார்.
Here, there What's the difference ? என்று ஒரு பாத்திரம் கேக்கும் .
ஆனால் வெளியேற வேண்டும் என்ற முனைப்போடு ஹீரோ வெளியே வருவார். பொதுப்புத்தியில் இருந்து தனித்து , உலகியலை தாண்டி வெளியே வரும் குறியீடு அழகாய் காட்டி இருப்பார்.அதே போல் இந்த படத்திலும் ஒரு முனைப்போடு பூமியை நோக்கி நகரும் பாத்திரப்படைப்பை இயக்குனர் வைத்திருக்கிறார். ஆனால் அதைவிட சிறப்பு என்னவென்றால் எங்கே ரயான் போராடுவது தன் மனதோடு. தன்னை Discourage செய்யும் மனதோடு போராடி வெல்லும் காட்சிகள் இருப்பது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒரு காட்சியில் ஒரு Euphoria experience, near death experience ஏற்பட்டு தடுமாறும் நேரத்தில் மீண்டும் மேட் வருகிறார்..ஆனால் அதற்கு பிறகு இருக்கும் டுவிஸ்ட் திரையில் பாருங்கள். இதுதானே நடக்கும் ன்னு எதிர்பார்த்த நேரத்தில்ஒரு "அட " Moment அங்கே. (ஒரு wrong number ஆசாமியுடன் உரையாடும் இடத்தை கவனியுங்கள் )
இப்படி இன்னும் இன்னும் நிறைய காட்சிகள் அருமையாய் இருக்கிறது. திரையில் பாருங்கள்
க்ளைமாக்ஸ் காட்சி அற்புதம் . அருமையான குறியீடு.
கூட்டை( zygote டில் இருந்து வரும் குழந்தை போல் ) உடைத்து ராயன் முதலில் நீந்தி, ஊரி , நாலு காலில் தவழ்ந்து, குரங்கை போல் தடுமாறி அரைகுறையாய் எழுந்து நின்று, பின் மனிதனைப்போல் நேராய் நிமிர்ந்து நிற்பது என்று பரிணாம வளர்ச்சியின் Dogma வை அருமையாய் கட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர். (அதற்கு முன் அந்த தவளை நீந்தி தப்பிக்கும் கட்சியை கவனியுங்கள் ).
பெரிய ஸ்க்ரீனில் பாருங்கள். 90 நிமிடங்களுக்கு ஒரு agoraphobia என்ற திறந்த வெளி குறித்த பயம் , Claustrophobia என்ற சிறிய இடத்தினுள் மாட்டி தவிக்கும் பயத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் .
ஆஸ்கார் வாங்காது , ஆனால் Visual Effects க்கு நாமினேட் செய்யப்படும் வாய்ப்பு அதிகம் . இயக்குனர் Alfonso Cuarón ஏற்கனவே Harry Potter and the Prisoner of Azkaban என்ற படத்தில் Time travelling என்ற கான்செப்ட்டை அழகாக வடிவமைத்திருப்பார். அதே போல் இந்த படத்திலும் விளையாடி இருக்கிறார்.
அவர் இயக்கிய Y tu Mama Tambien என்ற செமி Softcore படம், என் சிறுவயது favorite. இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் கியெர்மொ டெல் டோரோ , மறுபக்கம் Alfonso Cuarón பார்க்கையில் " சபாஷ் , சரியான போட்டி " என்று சொல்லதூண்டுகிறது.
நிச்சயம் நல்ல படம் .
Tidbits :
1. Sandra Bullock சுருண்டு குழந்தை போல் இருக்கும் சீனை இங்கே ஆங்கில ஊடகங்கள் ஸ்லாகித்து எழுதுகின்றன. மறுபிறப்பை அழகாய் காட்டும் சீன் என்று. ஆனால் இதற்க்கு முன்னரே Terminator 2 : Judgement Day படத்தில் அர்னால்ட் தோன்றும் சீன் , அவர் ஆடை ஏதும் இன்றி குழந்தை போல் பிறப்பு எடுத்து வரும் ஒரு புதிய ஜீவா ராசியாக காட்டியிருப்பார் ஜேம்ஸ் கமேரூன். ( தல டா !!). எனவே இது ஒன்னும் பெரிய சீனாய் தெரியவில்லை .
2. சாண்ட்ரா நாலுகாலில் நடக்கும் பரிணாம வளர்ச்சி குறியீடு சீன் போல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தால் , நம்ம தமிழ் சினிமாவிலேயே இருக்கிறது .
நண்பனின் தங்கை உடை மாற்றும் காட்சியில் பிரசன்னா ஒரு Peeping tom ஆக மாறி போய் லுக் விடுவார். ஆனால் நாலு காலில் ஊர்ந்து சென்று போய் குனிந்து அப்ரோச் செய்வார்.
இரண்டு கால் மனிதன் --> நான்கு கால் மிருகம் --> ஒழுங்கற்ற காமம்
இந்த Transition காட்சியமைப்பை அழகான குறியீடாய் வைத்திருப்பார் மிஷ்க்கின் .
3. Learn to Let go இந்த நல்ல " தாவோ " தத்துவத்தை இந்த படம் மறைமுகமாய் கூறுகிறது .
அதே ஜானரில் காட்சி அமைப்பு உள்ள படங்கள் வேறு சில உள .
சில நல்ல குறியீடுகள் இது போல் உள்ள படம் The Matrix. தாவோ சிம்பலான கருப்பு வெள்ளையை , அந்த பாசிடிவ் நெகடிவ் பாலன்ஸ் காட்ட Neo, morpheus போடும் சண்டை காட்சி ஒன்றில் அவர்களது உடை கலராக காட்டி இருப்பார்கள் . Kung Fu Panda படத்தில் இதே போல் பாண்டாவை "கருப்பு வெள்ளையில் " காட்டி தாவோ குறியீடை காட்டி இருப்பார்கள் .
4. மனதோடு போடும் போராட்டதை ஜென் குறியீடுகளுடன் கூறும் மற்றொரு படம் "The Peaceful Warrior ".
இன்னும் அழுத்தமான படம் வேண்டுமென்றால் " Revolver " என்ற படம் . தலைவன் Guy Ritchie ( தல டா !! )இயக்கிய படம்.
அதைவிட குறியீடு நிறைய தளும்பும் படம் என்றால் " The Fight Club " என்று டேவிட் பின்சர் இயக்கிய படம் பாருங்கள் .
(ஆனால் தலைவன் குப்ரிக் இயக்கிய The Shining படத்துடன் ஒப்பிட்டால் இதெல்லாம் தூசு...த்தா , நான் எடுக்குறேன் டா குறியீடு கிளாஸ் என்று தலைவன் குப்ரிக் அடித்து கூறும் படம் )
5. இது ஒரு குறியீடு இல்லை. ஆனால் ஒரு நல்ல Parable . " நெருப்புக்கு எதுடா , சுத்தம் , அசுத்தம் ? " என்று ஆரியா நெருப்பில் சிகரெட்டு பத்த வைக்கும் காட்சி.. அட !! Moment. அதே போல் வேறு குறியீடு காட்சியோ , parable காட்சியோ வேறு ஏதேனும் தமிழ் படத்தில் இருக்கிறதா ?...தெரிந்தால் கூறுங்கள். வி வாண்ட் மோர் மை டியர் தமிழ் இயக்குனர்ஸ்...
6. ரஷ்யர்களின் ஏவுகணை வெடிப்பால் வரும் பாதிப்பு. பின்னர் அமெரிக்க குழு , சீன ஸ்பேஸ் ஷிப் உதவியுடன் ஆபத்தை எதிர்கொள்வது மாதிரி காட்சியமைப்பு ... any realation to US-Chinese cold war pacification ?? ( கொளுத்தி விடுவோம் )
7. Shenzou என்ற கேப்சூளின் உள்ளே சென்று recover ஆகும் காட்சியமைப்பு . Shenzhou என்றால் டிவைன் என்று இணையம் கூறுகிறது . Saved by divine intervention என்ற கோட்பாடை காட்ட அந்த பெயரை பயன்படுத்தியது சிறப்பு. Dragonball Z தொடரை பார்த்திருந்தால் உயிர்பிக்கும், காப்பாற்றும் உணவிற்கு shenzou Bean என்ற பதம் வரும் .
படம் பாருங்களேன்...உங்களுக்கும் பிடிக்கும் ...அந்த தனிமையின் வாதையை அனுபவித்துவிட்டு வாருங்கள்...
இன்னொரு தடவ பார்க்கனும்னு தோன வெச்சுட்டீங்களே! டைரக்டர்கிட்ட காசு வாங்கிட்டீங்களா? :)
ReplyDeleteகாசு குடுபாருண்ணா சொல்லுங்க தல, இன்னும் மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுட்டு எழுதுவோம்
Deleteகாசு குடுபாருண்ணா சொல்லுங்க தல, இன்னும் மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுட்டு எழுதுவோம்
ReplyDeleteஒரு படத்தை எப்படிப் பார்க்கனும்னு இப்போ தான் கத்துகிட்டேன் தல .
ReplyDelete