Tuesday, September 24, 2013

முத்தம்

முத்தம் இருதையபூர்வமானது ..

அடக்கி , அமுக்கி புதைத்துவைக்கப்பட்ட காமத்திற்கு வேண்டுமானால் முத்தம் ஒரு வடிகாலாய் இருக்கலாம்....

ஈடுபாட்டுடன், காதலுடன் செய்யயும் காமம் கூட முத்தம் போல் இருதையப்பூர்வமான செயலாக இருக்கும் ... 

முத்தம் என்றாலே ஆண் பெண்ணுக்கோ , அல்லது பெண் ஆணுக்கோ கொடுக்கும் ஒரு நிகழ்வாய் ஆக்கிவிட்டதில் சினிமாவின் பங்கு மொக்கையான ஒன்று.... ஒரே பாலினர் பரிமாறிக்கொள்ளும் முத்தம் ஒரு பகடி நிகழ்வாக சில சினிமாக்கள் மாற்றிவிட்டன என்றால் அது மிகையில்லை.

முத்தம் குடுக்கையில் கிளு கிளு என்று பூங்கொத்தை ஆட்டுவது....வயலின் அல்லது குருவிகளின் ரீங்கார இசை Background டில் ஓடவிடுவது என்று முத்தத்தை ஒரு Big Bang theory போல் காட்டுவதில் சினிமா பெரும்பங்கு வகிக்கிறது .

ஒரு பர்சனல் அனுபவம் :

UK வில் இருந்த சமயத்தில் சில Hookers (பாலியல் தொழிலாளிகள் ) சிலர் எனக்கு நண்பர்களாய் இருந்திருக்கின்றனர்.அவர்களில் ஒருவருடனான உரையாடலின் போது ஒன்று கேட்டேன் .

"எல்லாவற்றையும் மற்ற ஆடவர்களுடன் பகிர்ந்துகொண்டப்பின் உங்கள் கணவர்களுக்கு குடுக்க என்ன இருக்கிறது ? " என்று.. (என்ன ஒரு ஆணாதிக்கம் எனக்கு அப்போது ?? )

அதற்க்கு அவர் சொன்ன பதில் " முத்தம் ..." "முத்தம் ஆத்மார்த்தமானது.."
அவரைவிட வேறு யாரு முத்தம் குறித்து கூறினாலும் சீரியசாய் எடுத்திருக்கவே மாட்டேன். காமத்தை கூட ஆத்மார்த்தமாய் பார்க்க கற்றுக்கொண்ட தருணம் அந்த சந்திப்பு.

Lip Kiss ஐ ,Mouth Kiss என்றே விளிக்கும் நம் ஆட்களிடம் எப்படி சொல்வது ??
மகள்களை பெற்ற அப்பாக்களின் முத்தம் மட்டுமல்ல, எந்த முத்தமும் காமத்தில் சேரவே சேராது என்பதை ....

சட்டுபுட்டுனு ஒரு கதை - 6---Online piracy



Online piracy

வெற்றிகரமாய் தான் இயக்கி சமீபத்தில் வெளிவந்த அந்த படத்தின் திருட்டு பிரிண்ட் இன்டர்நெட்டில் வெளியாகி இருந்ததை கண்டு பொங்கிக்கொண்டு இருந்தார் எதார்த்த சினிமா டைரெக்டர் .

ஒல்லிபிச்சான் நடிகர் வேறு இதை பெரியதாக கண்டுகொள்ளததால் எரிச்சலாய் இருந்தார்.

"ஒரு டைரக்டரின் உழைப்பை, தயாரிப்பாளரின் ரத்தத்தை உறிஞ்சும் online piracy யை ஒழிக்கவேண்டும் ".....இப்படி எல்லாம் tweet ரெடி பண்ணி வைத்துவிட்டார்.

கம்பியூட்டர் சிணுங்கியது

"Your anti-virus database is too old"

" யோவ் அஸ்சிஸ்டெண்டு !!... Anti-virus install பண்ண சொல்லி சொன்னேன் ல , இன்னும் பண்ணலையா ??...அந்த Torrent சைட் ல இருந்து இன்னும் Download ஆகலையா என்ன ??". என கத்தினார் டைரெக்டர்

சட்டு புட்டுன்னு ஒரு கதை - 8



கார்னர் சீட் எதார்த்த சினிமா :-

லவ்வரிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான் அவன்.

"ஹே ப்ளீஸ் பா ..சூப்பர் படம் ...மிஸ் பண்ண கூடாது ...இந்த படத்துக்கு இன்னைக்கு போலாம். மாட்டேன்னு மட்டும் சொல்லாத ..."

அப்படி என்ன டா நல்ல படம் ?

"இது ஒரு எதார்த்த சினிமா. இரானியமொழி படம், கிம் கி டுக், மார்டின் ஸ்கார்செசே படம் மாதிரி ஒரு டிப்பெரென்ட் ஸ்டைல் ல எடுத்த படம்.. தமிழ் ல இப்படி ஒரு படம் வர்றது அபூர்வம்...
இந்த சான்ஸ் மிஸ் பண்ணா கிடைக்கவே கிடைக்காது...ப்ளீஸ் வாயேன். நம்ம லவ் ஓகே ஆனதுக்கு அப்புறம் நாம போக போற பர்ஸ்டு படம் வேற ."

"என்னவோ சொல்ற....சரி டிக்கெட் புக் பண்ணிட்டியா ?"

"ஹ்ம்ம். கடைசி ரோ , Corner சீட் வாங்கிட்டேன்."

வண்டியை வேகமாக உதைத்து , கூட்டமே இல்லாத எதார்த்த சினிமா தியேட்டருக்கு கிளம்பினான் அந்த உன்னத சினிமா ரசிகன் 

போலி தமிழ்தேசியவாதிகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் ?



தமிழில் இருந்து தான் தங்கள் மொழிகள் திரிந்து வந்தன என்ற உண்மை நம்மைவிட மற்ற திராவிட மொழிக்காரர்களுக்கு நன்றாக தெரியும்...அதனால் தான் அவர்கள் தமிழை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மொழியை ஒரு ஆயுதமாய் வைத்து மக்களை வசப்படுத்தும் வேலையை செவ்வனே அந்த மாநிலங்களின் அரசியல் கட்சிகள் செய்துவருகின்றன.. இங்கே தமிழ்தேசியம் என்று பேசிப்பேசி பிற மாநில மக்களை வெறுக்க வைக்கும் சில கட்சிகளைப்போல் என்றோ பல கட்சிகள் அண்டை மாநிலங்களில் வந்துவிட்டன.

திராவிட சிந்தனைகளுக்கு பிற திராவிடமொழிகளின்மேல் அந்த tolerence level அதிகம். ஒரு தெலுங்கரை, கன்னடரை நாம் மொழி பாகுபாடு இன்றி நடிகராகவோ, அரசியல் தலைவராகவோ ஏற்றுக்கொள்ள திராவிட சிந்தனைகள் தந்த பக்குவம் தான் காரணம்.

இப்போது உள்ளது போல் தமிழ் தேசியம் எல்லாம் பேசி திரிந்தால் ஒரு கன்னட வெறியரை, தெலுகு வெறியரை நினைக்கையில் என்ன உணர்வு நமக்கு வருகிறதோ அதே ஒரு உணர்வு தான் தமிழனை பார்த்து மற்ற மொழிக்காரர்களுக்கும் வரும்.

துரதிஷ்டவசமாக இங்கே தமிழ் தேசியம் பேசும் கட்சிகாரர்கள் ஈழ ஆதரவாளர்களாக இருக்கின்றனர். மற்ற மொழிக்காரர்களை ஏற்க் மாட்டோம் என்று கூறும் அதே கட்சிகள் தமிழருக்கு அரசியல் அதிகாரம் சரிவர வழங்காத இலங்கை அரசை கண்டிப்பது பெயர் தான் நகைமுரண் .

தமிழின் திரிபு மொழிகள் தான் ஏனைய திராவிட மொழிகள் என்பதில் ஐயமே இல்லை எனினும் அண்ணன் அசோக் கூறியது போல் அதை ஒத்துக்கொள்ள அவர்கள் மனம் இடம் குடுக்காது...

மொழியை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி இன்றைய போலி தமிழ்தேசியவாதிகள் செய்யும் சுயநல அரசியல் களைவது என்பது மிக அவசியம்.

நம்மிலிருந்து பிரிந்தவர்கள் என்ற எண்ணம் நம்மோடு இருப்பதால் தான் வட நாட்டுகாரர்களிடம் வராத ஒரு அன்னியோன்யம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை பார்த்தால் நமக்கு வருகிறது. திராவிடம் என்ற சமத்துவத்தை போலிகள் மறுதலிக்க இதுவே காரணம். எதையாவது செய்து புரட்சி என்ற பெயரில் ஒரு பதற்ற நிலவரம் வேண்டும் அவர்களுக்கு. ஓட்டரசியலின் கேவலமான முகம் இது தான்.

மொழியை வைத்து பாகுபாடு காட்டிப்பிரிந்த இன்னொரு பிரதேசம் பாஸ்க் பிரதேசம் .(Basque country ) ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாய் இருந்தாலும் அவர்களுடன் ஒத்துப்போகாத ஒரு மனோபாவம் அவர்களுக்கு இருப்பதால் பாஸ்க் பிரதேசம் என்றாலே ஒரு தீவிரவாதிகள் நிறைந்த பிரதேசம் என்ற பிம்பம் ஐரோப்பிய மக்களுக்கு பெரிதும் உண்டு. ஒரு ஸ்பானிஷ் மனிதனுக்கு கிடைக்கும் மரியாதை பாஸ்க் பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவனுக்கு கிடைக்கவே கிடைக்காது எளிதில்.

இத்தகைய மொழி ரீதியிலான ஆயுதத்தை இந்த போலி தமிழ்தேசியவாதிகள் எடுத்து செயல்படுவது தமிழ் சூழலுக்கு மிக ஆபத்தானது. ( போன வருடம் தமிழ்நாட்டுக்கு வந்த புத்த பிட்சுக்களை தாக்கி தங்களுடைய தமிழ்பற்றை அந்த போலி தமிழ் தேசியவாதிகள் நிலைநாட்டினர் என்பது நினைவில் கொள்ளலாம் ).

இந்த "வந்தேறிகள் " என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு பிரிவரசியல் நிகழ்த்தும் மாய பிம்பம் தான் இந்த தனித்தமிழ் தேசியம் எல்லாம். எதிர்க்க எதுவுமே இல்லாத காரணத்தால் தான் உருப்படியான ஒன்றாக இருக்கும் திராவிட சிந்தனைகளை எல்லாம் எதிர்க்க துணிகிறது இந்த போலி தமிழ் தேசியம் .எதுவுமே இல்லாத காலத்தில் பெரிய ஆளாய் உருவெடுக்க ஹிட்லர் aryan superiority கொள்கையை கையிலெடுத்ததைபோல் தான் இந்த தமிழ் தேசியவாதிகளும் இறங்கியுள்ளார்கள்.

ஆரியத்தை , சாதியத்தை எதிர்ப்பதைவிட இத்தகைய போலி தமிழ் தேசியவாதிகள் நிகழ்த்தும் இந்த நூதன தீவிரவாதத்தை எதிர்ப்பது தமிழர் என்ற முறையில் மிக அவசியமாகிறது .

தூக்கு


ஏதோ நாங்க எல்லாம் ரத்தவெறி பிடிச்சி அலையிற மாதிரி சிலர் சொல்றாங்க..

எந்த தண்டனைக்கு இல்லாட்டியும் இந்த ரேப் க்கு தூக்கு தண்டனை வேணும் என்பது என்னோட விருப்பம்.

உயிர்கொலை அது இது ன்னு சொல்லுற ஆட்கள் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க . பிடிக்காதவங்க ப்ளாக் பண்ணிடுங்க 

1. இந்திய ராணுவம் வேறு ஒரு நாட்டின் மீது போர்தொடுக்கும் நேரங்களில் எல்லாம் எக்கச்சக்க அண்டை நாட்டு வீரர்கள் சாவார்கள்.. அவர்களில் எவனும் ரேப், கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டது கிடையாது ..அப்போது உயிரின் மதிப்பு குறித்து உங்கள் நல்ல எண்ணங்கள் எல்லாம் எங்கே போனது ?...உயிர் என்றால் எல்லாமே ஒன்னுதானே ?..அப்போது நீங்கள் இராணுவமே கூடாது என்று சொல்ல துணிவீர்களா ??

அண்டை நாட்டுக்காரன் நல்லவனாய் இருந்து செத்தாலும் பரவா இல்லை, ஆனால் சொந்த நாட்டில் அயோக்கியத்தனம் பண்ணிய பொறம்போக்கு பாடுகள் சாவதில் தான் கருணை உணர்வு அழிக்கப்பட்டுவிட போகிறதா ?

2. "எப்படியும் தூக்கு தண்டனை கிடையாது. ஒரு 18 வருஷம் வச்சிருந்துட்டு விட்ருவாங்க ".. இந்த ஒரு எண்ண ஓட்டம் இருப்பதனால் தான் சில பொறம்போக்குகள் " ஜாதிக்காக அவன வெட்டிட்டு நான் போவேண்டா ஜெயிலுக்கு " என்று வீர வாசன் மயிரு வசனம் எல்லாம் பேசிகிட்டு திரியுதுகள்...தூக்கு தண்டனை என்று ஒன்று இருந்தால் இந்த நாய்கள் இப்படி பேசுமா ?...தங்கள் கருத்து என்ன ?

3. சரி, ரேப் பண்ண நாய்களை ( நாய்கள் சமுதாயம் என்னை மன்னிக்கவும் ) வெளியே விட்டுட்டோம் . அல்லது மன்னிப்பு குடுக்காம ஆயுள் தண்டனை குடுக்குறோம்னு வச்சிப்போம்.. வெளிய வர்றவன் என்ன மகாத்மாவா மாறி தான் வர்றான என்ன ?. ஒரு வக்கிரமான மனதை , கொலை செய்ய துணியும் மனதை எல்லாம் அன்பால் திருத்தி 4 std Moral Science கிளாஸ் எடுக்க யார் வருவார்கள் ?.
அந்த நாய்களை உங்கள் வீட்டில் ஒரு மகனாகவோ, அல்லது மருமகனாகவோ ஏற்றுக்கொள்ள எத்தனைபேர் தயார் ?... பெண் குழந்தை உள்ளவர்கள் பதிலளிக்கலாம்.

4. "கொல்லுவதால் எந்த நிலைமையும் மாறப்போவது இல்லை "

ரொம்பவே கடுப்பேத்தும் வசனம் இது தான். ..நன்றாக யோசித்துப் பாருங்கள்...ஒரு கற்பழிப்பு சம்பவம் நடந்த பின் " சனி பொணம் தனியா போகாது " என்ற கதை போல் தொடர்ச்சியாக பல கற்பழிப்பு, பாலியல் கொலைகள் நடக்கும்.. காரணம் என்ன ?...இந்த மயிரான் எல்லாம் செய்யுற வேலைக்கு பின்னாடி ஒரு வித Guilt Pleasure இருக்கிறது..ஏதோ யாருமே செய்யாத தவறை நான் செய்கிறோம் ன்னு ஒவ்வொரு ரேப்பிச்ட்டுகளையும் பெருமையாக பீல் பண்ண வைக்கும் கொடூர மன உணர்வு. எங்கோ நடக்கும் ஒரு பரபரப்புக்கு நாம் காரணமாய் இருக்கிறோம் ன்னு அந்த ஆட்களை நினைக்க வைக்கும் ஒரு மனநிலை.

ஒரே ஒருவாட்டி கொன்னு பாருங்க... பரதேசி நாய்ங்க பொச்ச சாத்திக்கிட்டு கம்முனு இருக்கும்.

அன்பால சாதிக்க முடியாத சில விஷயங்களை பயம் சாதிக்கும்.

5. ஒரு காம்பவுண்டு சுவர் பிரச்சனைக்கு , 500 ரூபா குடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கு எல்லாம் நம்மளால பக்கத்துக்கு வீடுகாரன்கிட்டயோ அல்லது சொந்தகாரன்கிட்டயோ பகமை. பாராட்ட முடியுது....ஆனா தப்பு பண்ணவன் கிட்ட மட்டும் நாங்கள் அன்பை காட்டுவோம், அவனுக்கு லா லா லா ன்னு விக்ரமன் பாட்டு பாடி அவனை திருத்துவோம் ன்னு சொல்றது காமெடியா தெரியலையா ?....எல்லாருமே பல்லாண்டு வாழ்க படத்து எம். ஜி.ஆர் இல்லையே.....

6. இவ்ளோ பேசுற ஆட்கள், ஏன் நரகாசூர வதம் , ராவண வதத்தை எல்லாம் கொண்டாடனும் ?..ராவணன் சீதைய ரேப் பண்ணிட்டதா கம்பராமாயணம் சொல்லுதா ?... ரேப்பே பண்ணாத ஒருத்தவனுக்கு உங்கள் கடவுள் குடுத்த தண்டனை சரியா ?... இப்போது மரண தண்டனையை மறுதளிக்கிரீர் என்றால் நீங்கள் ராமனை எதிர்ப்பவர் என்று எடுத்துக்கொள்ளலாமா ?...

7. கடசியா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான்....புது இல்ல... " நான் சிவப்பு மனிதன் " படத்துல பாக்யராஜ் ஜட்ஜ் பொண்ண ரேப் பண்ணுற மாதிரி பாவலா காட்டுவார். அப்போது ஜட்ஜ் எடுக்கும் ஆயுதம் துப்பாக்கி...அப்போ பாக்யா சில நியாயங்களை எல்லாம் கேப்பார் ..அது எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று நெனைக்கிறேன்.

நான் கேட்க விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.. உங்கள் தாயோ, பாட்டியோ , 2 வயது குழந்தையோ உங்கள் கண்ணெதிரில் ஒரு 4 பேரால் வன்புணர்வு செய்யும்போது நீங்கள் எடுக்கு ஆயுதம் என்ன ?.

சட்டமா ?

வரவே வராத கடவுளா ?

இல்லை உங்கள் அருகில் கிடக்கும் உருட்டுக்கட்டையா ?

இதில் அதிசயமாய் இன்று சட்டமே உருட்டுக்கட்டையை எடுத்து இருக்கிறது. கரப்பான்பூச்சிகளை யார் அழித்தால் என்ன ?...சமூகம் சுத்தமானால் சரி தான்.

சட்டு புட்டுன்னு ஒரு கதை - 9

ஒரு எழுத்தாளனின் மடிக்கணினி திடீரென்று உயிர் பெற்று எழுதத் தொடங்கியது அந்த "சட்டு புட்டுன்னு ஒரு கதை - 9" யை ...
--------------------------------------------------------------------------------------------------
#I nclude <Stdio.h>
#define LAST 10
Void main ()

ஒருமுறை முயற்சித்த கணினி, தொடங்கிய கதை எழுதியது ,எழுதிடாத கதை யாரும் தான் வேண்டும் எழுத எண்ணியது என, வார்த்தைகள் மாறி மாறி ஆனால் வந்ததால் computer Generated கதை என்பது சாத்தியமில்லை நிப்பாட்டியது அதை உணர்ந்து 

return 0;
}

சட்டுபுட்டுனு ஒரு கதை 10

சட்டுபுட்டுனு ஒரு கதை 10 .

வேறு உலகம் :

இறந்தப்பின் வேறு உலகம் என்பது இல்லவே இல்லை என்று நிருபிக்க அந்த பிரபல எழுத்தாளர் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்து போனார்.

அவர் உடலை கிடத்திவைத்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் திடிரென்று ஒரு துண்டு பேப்பர் படபடத்தது ஆடியது .

அதிர்சியடைத்த உறவினர்கள் அதை பிரிக்கையில் 

" நான் ஜெயித்துவிட்டேன்.!! இறந்தபின் வேறு உலகம் என்பது இல்லை "

என்று மெல்லமாக,ஒவ்வொரு வார்த்தையாக அந்த எழுத்தாளரின் கையெழுத்தில் தோன்றத்தொடங்கியது